Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புதுக்குடியிருப்பில் சிறுத்தை பற்களை ஒரு இலட்சத்து 10ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியவர்கள் கைது


புதுக்குடியிருப்பில் சிறுத்தையின் பற்களை நபர் ஒருவரிடம் வாங்கி சென்ற வர்த்தகரும் , வர்த்தகருக்கு உடந்தையாக செயற்பட்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுத்தையின் நான்கு பற்களை இருவர் வாங்கி செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து நான்கு சிறுத்தை பற்களையும் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஒருவர் நகை  வர்த்தகத்தில் ஈடுபடும் நபர் எனவும் , மற்றையவர் அவருக்கு உதவியாக சென்ற நபர் எனவும் தெரிய வந்துள்ளது. அத்துடன் நான்கு சிறுத்தை பற்களையும் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வாங்கியதையும் கூறியுள்ளனர். 

அதன் அடிப்படையில் இவர்களுக்கு சிறுத்தை பற்களை விற்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.





No comments