போதை பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 32 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 170 கிராம் ஹெரோயின், 205 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவருக்கு உடந்தையாக செயற்பட்ட மற்றுமொரு இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் .










No comments