களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் நோயாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நோயாளி ஒருவரின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் பெண் வைத்தியர் பரிசோதித்த போது, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்
இது குறித்து வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் குறித்த நோயாளியை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மஹகம, சமகிபுர, தென்னஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், அவருக்குச் சிகிச்சை தேவைப்படுவதால் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையிலேயே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









No comments