Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். நண்பன் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலாளிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்காகி உயிரிழந்துள்ளார். 

தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் 

இரண்டு இளைஞர்களுக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் ஒரு இளைஞன் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை , மற்றைய இளைஞன் மேலும் இரண்டு இளைஞர்களுடன் , ஆலயத்திற்கு வந்து இளைஞனுடன் முரண்பட்டு கூரிய ஆயுதங்களால் தாக்கி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார். 

அதன் போது , தனது நண்பன் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி செல்ல ம் முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் தம்மை பிடிக்க முற்பட்ட இளைஞன் மீது சரமாரியாக தாக்கி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில்  , முன்னதாக தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் ,வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட நபர்களில் , இளைஞனுடன் முரண்பாட்டில் ஈடுபட்டு வந்த நபர் , இளைஞன் உயிரிழந்த விடயம் தெரியாது, தன்னை ஆலயத்தில் வைத்து இளைஞர்கள் குழு தாக்கி விட்டார்கள் என காயங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டினை அடுத்து , இளைஞனை சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு , முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளையே , முறைப்பாட்டாளர் உள்ளிட்ட மூவரின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்ததும் , மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்ததும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. 

அதனை அடுத்து முறைப்பாடு செய்த பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞனுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர் , சிகிச்சையின் பின்னர் இளைஞனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த இளைஞனுடன் தாக்குதலுக்கு சென்ற மற்றைய இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 











No comments