வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண வடிவமைப்பு அலுவலகம் இன்றையதினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் அலுவலகத்தில் வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடிவமைப்பு அலுவலகம் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் திறந்துவைக்கப்பட்டது.
இதன் போது வடிவமைப்பு அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களும் பிமல் ரத்நாயக்கவினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஶ்ரீபவானந்தராஜா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்கள் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.














No comments