Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்


யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை,  அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, யாழ். மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வடக்கு மாகாணக் கடற்படைத் தளபதி, யாழ். மாவட்டச் செயலாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், நெடுந்தீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.










No comments