கிளிநொச்சியில், புத்தாண்டு தினமான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது வான் மோதியதில் 44 வயதுடைய நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அதிவேகமாகச் சென்ற வான் ஒன்றே, பாதசாரி கடவையூடாக வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் வான் சாரதியை கைது செய்துள்ளதுடன் , விபத்து குறித்து , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









No comments