Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கேப்பாபிலவு காணி விடுவிப்பு - இராணுவத்துடன் பேச்சு நடாத்தி விரைவில் முடிவைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி பதில்


முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத்தொடர்பில், கூடியவிரைவில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி  அனுரகுமார திஸாநாயக்க, குறித்த கலந்துரையாடலின் பின்னர் கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பான முடிவு தம்மால் அறிவிக்கப்படுமெனவும் பதிலளித்துள்ளார்.

பாராளுமன்ற குழு அறையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது

குறித்த ஆலேசனைக்குழுக்கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கேப்பாபுலவு காணி விடுவிப்பு விடயத்தில், கடந்த கூட்டத்தில் இராணுவத்தினரிடமிருந்து ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்க அவர்களால் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது. எனினும் இராணுவத்தினரிடமிருந்து முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லையெனச் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இராணுவத்திற்கு அந்தக் காணிகள் தேவையென காணி உரிமையார்களிடம் இராணுவத்தால் ஏற்கனவே கோரப்பட்டதா எனவும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

குறித்த காணிவிடயத்தில், காணி உரிமையாளர்கள் தமக்கு சீரான அறிவித்தல்கள் எதனையும் தமக்குத் தரவில்லை எனவும், அது தொடர்பாக தாம் விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிப்பதாக இராணுவத்தினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை இவ் விடயத்தில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளுக்கு மாற்றீடாக 44காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டிருந்தாலும், 11பேருக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்படவில்லை என ஜனாதிபதியால்  சுட்டிக்காட்டப்பட்டது. 

எனவே இந்தவிடயத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் 11பேருக்கான மாற்றுக்காணி வழங்கும் விடயத்தில் கவனஞ்செலுத்தியிருக்கலாம் எனவும் ஜனதிபதியால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கேப்பாப்புலவு மக்களின் பூர்விகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி நான் எனது கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.

குறிப்பாக 1818ஆம் ஆண்டளவிலிருந்து கேப்பாப்பிலவில் மக்கள் குடியிருப்பதாக வரலாறுகள் இருக்கின்றது என்ற விடயத்தினை இதன்போது சுட்டிக்காட்டினேன்.
அந்தவகையில் மக்களின் வாழ்வாதார மூலங்களுடன்கூடிய பூர்வீக குடியிருப்புக் காணிகளே இவ்வாறு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினேன்.

அத்தோடு முன்னைய காலங்களில் கேப்பாப்பிலவுப் பகுதியில் இராணுவமுகாம்கள் எவையும் இருந்திருக்கவில்லை என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு மக்கள் தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்வதற்கு வந்தபோது அவர்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதை அந்த காணிகளுக்குரிய மக்களால் அவதானிக்க முடிந்துள்ளது.

இத்தகையசூழலில் அயற் கிராமமான சீனியாமோட்டை என்னும் கிராமத்தில் இந்த மக்கள் குடியேற்றப்பட்டனர். குறிப்பாக ஒரு குடும்பத்திற்கு  0.25ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டு அந்த மக்கள் குடியேற்றஞ் செய்யப்பட்டனர். 

இவ்வாறு மக்கள் தமது கேப்பாப்பிலவு பூர்வீகக் கிராமத்தில் மீள்குடியமர்த்தப்படாமல் அயற்கிராமத்தில் குடியேற்றஞ்செய்வதற்கு அப்போது மிகக்கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர். 

இந்நிலைமில் இது ஒரு தற்காலிக ஏற்பாடு எனவும், இராணுவம் மக்களின் காணிகளில் இருந்து வெளியேறிய பிற்பாடு, மக்கள் அவர்களது சொந்தக்காணிகளில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என முல்லைத்தீவு மாவட்டசெயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் என்பவற்றினால் மக்களுக்கு உறுதிமொழி வழங்கப்பக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தினேன்.

அவ்வாறு தெரிவிக்கப்பட்டபோதும் கேப்பாப்பிலவில் பகுதியளவான காணிகளே விடுவிக்கப்பட்டு பக்ஈள் குடியேற்றப்பட்டனர். 

அந்தவகையில் இன்னும் 55பேருக்குரிய 59.9ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. குறித்த விடயத்தை முல்லைத்தீவு மாவட்டசெயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

அத்தோடு நான் ஏற்கனவே குறித்த கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மவட்டசெயலகத்தில் இருந்து பெறப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளுடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதற்கு அமைவாக, ஜனாதிபதி செயலகம் இராணுவத்தரப்பினருக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன், அந்தக்கடிதம் எனக்கும் பிரதியிடப்பட்டிருப்பதையும் இதன்போது நினைவு படுத்தியிருந்தேன்.

அத்தோடு கேப்பாப்பிலவில் விடுவிக்கப்படவேண்டியுகாணிகள் தொடர்பான விவரங்கள் மற்றும் ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதிகள் என்பவற்றை ஜனதிபதியிடம் இதன்போது நேரடியாகக் கையளித்துமிருந்தேன்.

அத்தோடு மக்களுடைய இந்தகாணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தேன்.
குறிப்பாக இராணுவத்தினர் வெளியேறிய பிற்பாடு சொந்தக்காணிகளில் குடியேற்றப்படுவீர்கள் என்ற உத்தரவாதத்துடன் ஒருகுடும்பத்திற்கு 0.25ஏக்கர் காணிவீதம் 44குடும்பங்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டுள்ளது. 

அத்தோடு 11பேருக்கு மாற்றுக்காணிகள் எவையும் வழங்கப்படவில்லை. எனினும் இராணுவம் அபகரித்து வைத்துள்ள பகுதியில் மக்கள் ஒவ்வொருவருக்கும் 01ஏக்கருக்கும் மேலான பூர்வீக காணிகள் இருப்பதையும் இதன்போது சுட்டிக்காட்டினேன்.

அத்தோடு மக்களின் பூர்வீகக் காணிகள் நந்திக்கடல் களப்பின் அருகோடு இருப்பதனால், அவர்களுக்கு நந்தித்கடல் களப்பு பெரும் வாழ்வாதார வளமாக இருந்துவந்துள்ளது. இதுதவிர இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக காணிகள் ஒவ்வொன்றுக்குள்ளும் தென்னை, உள்ளிட்ட பல்வேறு பலன்தரு மரங்கள் காணப்படுவதுடன், பயிர்ச்செய்கை நிலங்களும் காணப்படுகின்றன. இத்தகைய வளம்மிக்க காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதால் அந்த மக்களின் வாழ்வாதாரம் பலவழிகளிலும் பாதிக்கப்படுகின்றது என்ற விடயத்தினை இதன்போது ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியிருந்தேன்.

எனவே அந்தக்காணிகளை உடனடியாக விடுவிப்புச்செய்து, மக்களை அங்கு மீளக்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென ஜனாதிபதியிடம்  வலியுறுத்தினேன்.

அத்தோடு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணி விடுவிப்பினை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவந்தனர். 

இந்நிலையில் இந்த அரசாங்கம் தமது காணிகளை விடுவிக்கும் என்ற பெருத்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் போராட்டங்களை மேற்கொள்ளாது தமது பூர்வீக காணிவிடுவிப்பிற்காக கேப்பாப்புலவு மக்கள் காத்திருக்கின்றனர் என்பதை இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தேன். 

எனவே கேப்பாப்பிலவு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அவர்களின் காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தினேன்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் இராணுவத்துடன் தாம் கூடியவிரைவில் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி  தெரிவித்தார். 

No comments