Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். போதைப்பொருள் விற்பனையாளர் உள்ளிட்ட மூவர் கைது


யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , அளவெட்டி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்து சோதனையிட்ட போது , அவர்களின் உடைமையில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. 

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் 2கிராம் 380 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , மூவரையும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments