Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மனைவியின் தாய் , மனைவியின் சகோதரியின் கணவன் ஆகியோரை வெட்டி கொலை செய்த முன்னாள் இராணுவ சிப்பாய்


மனைவியின் தாய் , மனைவியின் சகோதரியின் கணவர் ஆகியோரை படுகொலை செய்ததுடன் , மனைவியின் சகோதரியின் மகள் மீது தாக்குதலை மேற்கொண்டு படுகாயங்களை ஏற்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்

காலி பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

முன்னாள் இராணுவ சிப்பாயானா 35 வயதுடைய நபர் தனது மனைவியின் தாய் வீட்டுக்கு கூரிய ஆயுதத்துடன் சென்று வீட்டில் இருந்த மனைவியின் தாய் , மனைவியின் சகோதரியின் கணவன் மற்றும் மனைவியின் சகோதரியின் மகள் ஆகியோர் மீது மூர்க்கததமான தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். 

தாக்குதலில் படுகாயமடைந்த மூவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் , தாக்குதலாளியின் மனைவியின் தாய் , மனைவியின் சகோதரியின் கணவன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

படுகாயமடைந்த  தாக்குதலாளியின் மனைவியின் சகோதரியின் மகள் ஒரு கையை இழந்த நிலையில் , உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளியை கைது செய்து  விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தாக்குதலாளியின் மனைவி இத்தாலியில் பணி புரிந்து வருவதாகவும் , தனிப்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே இக்கொலைகள் இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments