Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

விபத்தில் கணவன் உயிரிழப்பு ; மனைவி படுகாயம் - இராணுவ சிப்பாய் கைது


திருகோணமலை- நாமல்வத்தை பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயமடைந்துள்ளார். 

மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டி நாமல்வத்த பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜீ. சுனில் ரத்ன பண்டார (வயது 50) என்பவர் உயிரிழந்துள்ளார். 

அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரின் மனைவியான கே யூ. அனுஷ்கா  படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியான இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மொயவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments