Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

15 மாதங்களில் நவீன வசதிகளுடன் கோட்டை புகையிரத நிலையம் மாறும்


கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் 109 வருடகால வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாத்தவாறு, நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு CSRP திட்டத்தின் கீழ் இந்த பணிகளை ஆரம்பித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ. 2162.64 மில்லியன் செலவில் இடம்பெறும் இந்த திட்டம் 15 மாதங்களில் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக

• மருதானை, கொம்பனி வீதிக்கு நவீன மேம்பாலம்

மருதானை மற்றும் கொம்பனிவீதி முனைகளில் உள்ள பழைய மேம்பாலங்களுக்கு பதிலாக மின்தூக்கிகள் மற்றும் எஸ்கலேட்டர்களுடன் புதிய பயணிகள் மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. 

• மூன்று மாடி சேவைக் கட்டடம்

அத்துடன் பயணிகள் தேவைகளை பூர்த்தி செய்ய 3 மாடி சேவை வழங்கல் கட்டடம் ஒன்றும் நிர்மாணிக்கப்படுகிறது.

• புதிய நுழைவு வசதி

புறக்கோட்டை ஒல்கோட் மாவத்தை ஊடாக உள்ள மேம்பாலம் மெக்கல்லம் வீதியுடன் இணைக்கப்பட்டு புதிய நுழைவு வசதிகள் உருவாக்கப்படவுள்ளது. 

• டிஜிட்டல் நுழைவு, வெளியேறல்

E-Gate எனப்படும் டிஜிட்டல் நுழைவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு புகையிரத நிலையத்திற்குள் நுழைதல் மற்றும் வெளியேறும் செயனமுறையும் சீரமைக்கப்படுகிறது.

நூற்றாண்டு பழமையான இந்த புகையிரத நிலையத்தின் தொல்லியல் மதிப்பை பாதுகாத்தவாறு, தினசரி புகையிரத சேவைகளுக்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படாத வகையில் இந்த மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










No comments