நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர், அனுமதிப்பத்திரமின்றி 150 லீற்றர் டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொச்சிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நீர்கொழும்பு பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவினர் தலுவகொட்டுவ பகுதியில் சோதனை நடத்தி சந்தேக நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.







No comments