புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர் தொடர்பில் சிசிரிவி கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த போலீஸார் 33 வயதுடைய இளைஞனை நேற்றைய தினம் சனிக்கிழமை களனி பகுதியில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.









No comments