Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆற்றில் திடீரென அதிகரித்த நீர் வரத்து தந்தை மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு - மேலும் சிலரை காணவில்லை.


தெதுறு ஓயாவில் மூழ்கி தந்தை மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். 

தெதுறு ஓயாவில் சுமார் 10 பேர் கொண்ட குழு ஒன்று இன்றைய தினம் நீராடிக்கொண்டிருந்த வேளை , திடீரென நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து நீராடிக்கொண்டிருந்தவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். 

அவர்களில் தந்தை , மகன் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

அதேவேளை நீரில் அடித்து செல்லப்பட்டவர்களில் இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஏனையோர் காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

மகாவலி கங்கையில் நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தில் நீராடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் தந்தை மகன் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments