நாட்டில் கடந்த ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களில் மாத்திரம் 19 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
வாகன வகைகளின் அடிப்படையில், அதிகபட்சமாக 16 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் 4 முச்சக்கரவண்டிகள், 4 வேன்கள், 2 கார்கள், 2 கெப் வாகனங்கள், 2 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் என்பன இதில் உள்ளடங்குவதாக மேலும் தெரிவித்தார்.









No comments