கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குமாரபுரம், சுட்டத்தீவு கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சடலத்தின் அருகில் ஆவணங்களோ வேறு சந்தேகத்திற்கு இடமான தடய பொருட்களோ மீட்கப்படாத நிலையில் , சடலத்தை அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்









No comments