Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணி மனித புதைகுழி - அகழ்ந்து எடுக்கப்பட்ட என்பு கூட்டு தொகுதியின் எண்ணிக்கை 240 ஆக அதிகரிப்பு


செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு மனித என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 

அதன் மூலம் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 240ஆக அதிகரித்துள்ளது,.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் நான்காம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது ஒரு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டு , சுத்தம் செய்யப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை நேற்றைய தினம் புதன்கிழமை அகழ்வு பணிகளின் போது சந்தேகத்திற்குரிய வகையில் புதைகுழிக்குள் கறுப்பு நிற மண் காணப்பட்டமையால் , அவற்றை அரித்து எடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது அதனுள் இருந்து ஒரு நாணயக்குற்றி மீட்கப்பட்ட நிலையில் ,அதனை சான்று பொருளாக அடையாளப்படுத்தி பாதுகாக்கப்பட்டுள்ளது. 

நாளைய தினம் விடுமுறை நாள் என்பதால் , அரை நாள் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது 

No comments