Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மரணதண்டனை விதிக்கப்பட்டதும் தனது உயிர்மாய்க்க முயன்றவர் ஆபத்தான நிலையில்


நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து குறித்த நபர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் , ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். 

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கூண்டிலிருந்து சிறை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கைதி தன்வசம் வைத்திருந்த நஞ்சை அருந்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். 

இதைக் கண்ட சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, உடனடியாக அவரை  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

சம்பவம் குறித்து நுவரெலியா தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments