Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்குமா ? நாமலுக்கு வந்த சந்தேகம்


மாகாண சபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர அரசு தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுகின்றது. மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த முடியாது என்று தெரிவிக்க ஜே.வி.பியின்  பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது.? என நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர அரசு தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுகின்றது. மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று தெரிவிக்க ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது.?

மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று ஜே.வி.பி.யின் கட்சித் தலைமையகம் தீர்மானிக்குமாயின் சுயாதீன  தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு? 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையும் இந்த அரசு நடத்துமா என்பது சந்தேகத்துக்கிடமாகவுள்ளது என்றார். 

No comments