Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். உணவகத்திற்குள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றம் - உணவகத்திற்கு சீல் வைக்க உத்தரவு


யாழ்ப்பாணத்தில் உணவகம் ஒன்றினுள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவகத்திற்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது, உணவகத்தில் இருந்து கழிவுநீரை வெளியில் விட்டு துர்நாற்றம் ஏற்படுத்தியமை, கடைக்குள் பூனை வளர்த்தமை, அழுகிய முட்டை இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்தமை மற்றும்  திறந்த வெளியில் சமைத்தமை போன்ற சுகாதார சீர்கேடுகளுக்கு எதிராக உணவாக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு இருந்தார். 

அதன் பிரகாரம் நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உணவக உரிமையாளர் மன்றில் முன்னிலையாகி தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார். 

அதனை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் , இனம் காணப்பட்ட சுகாதர சீர்கேடுகளை நிவர்த்தி, செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு சுகாதார பரிசோதகருக்கு மன்று பணித்துள்ளது. 


No comments