சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளது.
அம்மாச்சி உணவகம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாக , பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் , அம்மாச்சியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை , ஏற்கனவே இனம் காணப்பட்ட சுகாதார பிரச்சனைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை மீறி உணவகம் தொடர்ந்து இயங்கி வந்தமையால் , குறித்த பிரச்சனைகளை சீர் செய்யும் வரையில் உணவகத்தை மூட பணித்துள்ளார்.
அதேவேளை அம்மாச்சி உணவக உணவு கையாள்வோருக்கான விழிப்பணர்வு செயற்பாட்டையும் முன்னெடுத்திருந்தார்.









No comments