Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வர்த்தக நிலையத்தினுள் புகுந்த கும்பலால் வயோதிப தம்பதியினர் படுகொலை


ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. 

குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதுடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இந்த வர்த்தக நிலையத்தில் வியாபாரம் செய்து வந்த நிலையில், தற்போது கடையை மூடிவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் பிள்ளைகள் அவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காமையினால், அயலவர்களுக்கு அறிவித்த நிலையில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments