Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கரடியனாறு பொலிஸ் நிலைய தடுப்புக்காவலில் கைதி உயிரிழப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில்   தடுப்புக்காவலிலிருந்த கைதியொருவர்  உயிரிழந்துள்ளார்.

கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த சுப்பையா வசந்தகுமார் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மதுபானம் அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் தகறாறில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த நபரின் மனைவி கரடியானாறு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்தனர். 

இது தொடர்பிலான விசாரணைக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சற்று நேரத்தில் மயக்க நிலையடைந்ததாகவும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டவேளை மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த நபர் பொலிஸாரினால் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


No comments