Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நயினாதீவு அதிபர் உயிரிழப்பு - படகோட்டி விளக்கமறியலில்


படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி, நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடற்சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலினுள் தவறி விழுந்து நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபரான நடராசா மயூரன் (வயது 48) என்பவர் உயிரிழந்துள்ளார் 

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் படகோட்டியை கைது செய்து , விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், ஊர்காவற்துறை நீதாவன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது, படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


No comments