Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் வீடுகளில் தொடர் திருட்டு - இளம் தம்பதி கைது


கிளிநொச்சியில் 09 வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,  திருட்டு பொருட்கள் சிலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

கிளிநொச்சி உதயநகர், அம்பாள்குளம், விநாயகபுரம், சாந்தபுரம் மற்றும் கனகாம்பிகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 09 வீடுகளுக்குள் பகல் நேரங்களில் புகுந்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அடிப்படையில் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய கணவனையும் அவரது 20 வயதுடைய மனைவியையும் கைது செய்தனர் 

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 10 பவுண் தங்க நகைகள் , தொலைபேசிகள், தொலைக்காட்சி , ஒலிபெருக்கி சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் 





No comments