Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணி அகழ்வுகள் ஜூன் முதலாம் திகதி வரை நிறுத்தம்


செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு , மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமான நிலையில் , இன்றைய தினம் சனிக்கிழமை வரையில் 12 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. 

இந்நிலையில் இன்றைய தினத்துடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் முதலாம் திகதி மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது 

இன்றைய தினம் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, ஒரு மனித என்பு கூட்டு தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் 05 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

அதன் பிரகாரம் செம்மணி புதைகுழிக்குள் இருந்து இதுவரையிலான கால பகுதியில் 261 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட என்பு தொகுதி ஒன்றின் மண்டையோடு பகுதி மாத்திரம் வெளி தெரிந்த நிலையில் , அது அகழ்ந்து எடுக்கப்படாத நிலையில் , அதற்கு இலக்கம் இடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 12 நாட்களாக நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 21 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு , அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் , புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி , நாணய குற்றிகள் , ஆணிகள் , மஞ்சள் நிற வளையல் துண்டு உள்ளடங்கலாக 17 பிற பொருட்கள் மீட்கப்பட்டு அவை நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 1ஆம் திகதி மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள பகுதிகளில் காணப்படும் புற்தரைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments