Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பலாலி கிழக்கை முதல்கட்டமாக விடுவியுங்கள் - மாவட்ட செயலர் கோரிக்கை


யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் கடந்தஹ் 36 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தனியார் காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம,பிரதீபன் , பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம்  செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த  பாதுகாப்பு பிரதி அமைச்சர்  அருண ஜெயசேகர அவர்கள் பலாலி கிழக்கில் உள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு கள ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தார்.

அதன் போதே மாவட்ட செயலர் கோரிக்கை விடுத்துள்ளார். 

யாழ் . மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தின் காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பலாலி கிழக்கு பகுதியில் உள்ள காணிகளையும் விடுவிக்க விடும் என மாவட்ட செயலர் விடுத்த கோரிக்கையை அடுத்து பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக  பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் 1986 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்திற்கான காணி விஸ்திரிக்கப்பட்ட போது அக் காணிக்கான நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் மாவட்ட செயலர்  பிரதி அமைச்சரிடம் தெரியப்படுத்திய போது, விரைவில் கொழும்பில் தனியான கலந்துரையாடலில் இது தொடர்பாக ஆராய்வதாக பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வழிபாட்டுத்தலங்களில் வழிபடுவதற்கான நடவடிக்கைகளையும், வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சருடன், கடற்றொழி்ல் நீரியல் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்  கருணநாதன் இளங்குமரன், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, யாழ்ப்பாணம் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.









No comments