Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் பருத்தித்துறை முதலிடம்


யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான  மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு  மைதானத்தில் இடம்பெற்றது. 

இந்த விளையாட்டுப் போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முதலாவது இடத்தினையும், நல்லூர் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், சங்கானை பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள். 

அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு  வீரர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மாவட்ட செயலர் ம.பிரதீபன் , மேலதிக செயலர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.








No comments