செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.
குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதன்கிழமை வழக்கு அழைக்கப்பட்ட நிலையில், நீதி அமைச்சின் விசேட குழுவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட பிரநிதிகள் குழுவும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது









No comments