Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.போதனாவிற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர்


யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். 

வைத்தியசாலைப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

அதன் போது வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள், மனிதவளத் தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. 

அதனை தொடர்ந்து நவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வழங்கி வைத்ததுடன், வைத்தியசாலையின் நூதன சாலையையும் பார்வையிட்டார். 

குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , ச. சிறிபவனந்தராசா , க.இளங்குமரன் , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.





No comments