பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து , தேசிய ரீதியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் தீர்மானித்துள்ளது.
வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் அதன் உப தலைவர் அன்டனி ஆல்பர்ட் தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதன் போது, கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் புதிய அரசாங்கமும் கடற்தொழில் அமைச்சரும் கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கான எந்தவித தீர்வுகளையும் முன் வைக்காத நிலையில் தேசிய ரீதியில் மாபெரும் போராட்டம் ஒன்றியம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுக் கூட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் கேமன் குமார, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர்களும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டம் நிறைவுறும் தருவாயில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருன் கலந்துகொண்டதுடன் கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.









No comments