செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 13 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 31ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
மூன்று என்புக்கூடுகள் ஒரே நேர்கோட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை , நேர்சீரின்மையாக 09 என்புக்கூடுகள் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது,412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 390 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, மரபணு பரிசோதனை , அகழ்வாய்வு என்பது இரு வகையான செயற்பாடு, என்புகளை அடையாளம் காண்பது ஒரு கட்டம். அடையாளம் காணப்படுவது இரண்டாம் கட்ட நடவடிக்கை அதன்போதே பால் வயது போன்ற மேலதிக விடயங்கள் தெரியவரும்.
அத்தோடு தொல்லியல் நிபுணர்களால் காலம் கணிக்கப்படும் அதன்பிறகே உறவினர்கள் தமது உறவினர்கள் தொடர்பில் தேடிவரும் போதே மரபணு சோதனைகளை மேற்கொள்ள முடியும்.
முன்னதாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை சேகரித்து வைக்க முடியாத நிலைமை காணப்படுகிறது என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.









No comments