தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் பிரிவு ஆகியவற்றை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என ஒரு தரப்பினர் கோரி வரும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெல்லிப்பழை வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடலை நடாத்தினார்.
குறித்த கலந்துரையாடலில், வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள், மனிதவளத் தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சர் இ. சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவனந்தராசா , வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், வைத்தியர்கள், தாதியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















No comments