Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது


எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு , நடைபெற்ற இசை நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞனான இளைஞன் பக்தி பாடல்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். 

தான் இசை நிகழ்வில் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு , ஏற்கனவே தனது இசை சேர்க்கையில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து , அதனை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். 

குறித்த பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து , தென்னிலங்கையில் பலரும் கடுமையான விமர்சனங்களையும் , இனவாத கருத்துக்களையும் முன் வைத்தனர். 

இந்நிலையில் , குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் , பாடலை பாடிய கிளிநொச்சியை சேர்ந்த இளைஞனை கைது செய்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து இளைஞனை பொலிஸார் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர். 

அதேவேளை யாழ்ப்பாணத்தில் தற்போது ஆலய திருவிழாக்கள் பல இடங்களிலும் நடைபெற்று வரும் நிலையில் , திருவிழாக்களில் நடைபெறும் மேள கச்சேரி மற்றும் இசை நிகழ்வுகளில் தாயக எழுச்சி பாடல்கள் இசைக்கப்படுவது மற்றும் பாடப்படுவது தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதனால் , அவை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

உரும்பிராய் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற இசை நிகழ்வில் தாயக பாடல்களை பாடிய குற்றச்சாட்டில் தாயகத்தின் புகழ் பூத்த பாடகரான மறைந்த பாடகர் எஸ்.ஜி சாந்தனின் மகனான கோகுலன் உள்ளிட்ட இருவரை கோப்பாய் பொலிஸார் விசாரணைக்கு அழைத்து கடுமையான விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் விடுவித்திருந்தார். 

யுத்தம் நடைபெற்ற கால பகுதியில் தாயகத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்தும் , விடுதலைப்புலிகளின் பாடல்கள் அல்ல. அக்கால பகுதியிலும் காதல் பாடல்கள் , பக்தி பாடல்கள் , யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புக்கள் வலிகளை கூறும் பல   பாடல்கள் வெளிவந்தன. அவற்றினையே படுகிறோம். பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பாடல்களை நாம் பாடவில்லை என பாடகர்கள் தெரிவித்திருந்தனர். 

No comments