Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

'' ஆரோக்கியமான முதுமைக்கான யோகம்'' - யாழில். 12ஆவது சர்வதேச யோக தின நிகழ்வுகள்


யாழ்ப்பாணத்தில் '' ஆரோக்கியமான முதுமைக்கான யோகம்'' என்ற தொனிப் பொருளில் 12ஆவது தடவையாகவும் யோகாசன நிகழ்வுகள் இடம்பெற்றன.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின். ஏற்பாட்டில் துணைத் தூதரக தூதுவர் சாய் முரளியின் தலைமையில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை யோகா தின நிகழ்வுகளும் யோகாசன கலைகளும் இடம்பெற்றன.

யாழ் மாவட்டத்திலுள்ள 2500 க்கு மேற்பட்ட யோகாசன மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதன்போது பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் இந்திய துணை தூதரகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

 அதேநேரம் மாலை நிகழ்வாக யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் யோகாசன சிறப்பு நிகழ்வுகள் மேடை நிகழ்வுகளாக இடம்பெற்றன. 




No comments