Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று


யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து 2ம் சங்கிலிய மன்னனின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய கண்காட்சி அரங்கமும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோவில் ஆதீன கர்த்தா சிவஶ்ரீ சுந்தரேஸ்வரக் குருக்கள், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதி ஶ்ரீ விமலதேரர் , பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாநகர ஆணையாளர் க.அரவிந்தராஜ் , மதத்தலைவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.









No comments