Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அச்சுவேலியில் தீ


யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் குப்பைக்கு மூட்டிய தீ , அருகில் உள்ள புற்தரைகள் ஊடாக பரவியமையால் , பல ஏக்கர் புற்தரைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 

அச்சுவேலி பகுதியில் காணப்படும் தரவை பகுதியில் காணப்பட்ட  குப்பைக்கு இனம் தெரியாத நபர்கள் தீ மூட்டியதில் , கடும் காற்று காரணமாக தீ , தரவை பகுதியில் உள்ள புற்தரைகள் ஊடாக வேகமாக பரவியது. 

அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மற்றும் மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு ஊரவர்கள் அறிவித்ததை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் , தீயணைப்பு பிரிவினர் மற்றும் ஊரவர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீ குடியிருப்பு பகுதிக்குள் பரவ முதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டமையால் ,பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக ஊரவர்கள் தெரிவித்தனர்.

No comments