Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.பண்ணையில் விபத்து - சாரதிய பயிற்சி பெற வந்த இளைஞன் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி பாரதி வீதியை சேர்ந்த சானுஜன் (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் 

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதான வீதியில் பண்ணை பகுதியில் , சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த இளைஞன் , சாரதிய பயிற்சியை முடித்த பின்னர் , வாகனத்தை விட்டு , இறங்கி வீதியை கடக்க முற்பட்ட வேளை வீதியில் வந்த வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் வாகன சாரதியை கைது செய்துள்ள யாழ்ப்பாண பொலிஸார் , விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments