யாழ்ப்பாணம் , திருநெல்வேலி சந்தை பகுதியில் ஆடியபாதம் வீதியினை நல்லூர் பிரதேச சபையின் நிதியில் தார்ப்படுக்கை (காப்பெட்) வீதியாக மற்றும் வேலைத்திட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்றைய தினம் வியாழக்கிழமை மற்றும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் குறித்த வீதிப் பகுதி, போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்பட்டிருக்கும் எனவும் , அதனால் பொதுமக்களும் வாகனச் சாரதிகளும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், அபிவிருத்திப் பணிகள் தடையின்றி சிறப்பாக நடைபெற தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் கேட்டுக் கொண்டுள்ளார்.















No comments