Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சுரேஷ் சாலி மற்றும் பிள்ளையான் போன்றவர்களின் பாதுகாப்பு உறுதி செய்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் குற்றவாளிகளுக்கு சட்டத்தினால் சரியான தீர்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக்கோரியும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டித்தும் மட்டக்களப்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த பயங்கரவாதச் செயலுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த தட்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் நீதிமன்றத்தின் ஊடாக இந்த விசாரணை நடைமுறைகள் துரிதப்படுத்தப்பட்டு, தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட வேண்டும்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சிகளாகக் கருதப்படும் சுரேஷ் சாலி மற்றும் பிள்ளையான் போன்றவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். 

குற்றம் செய்தவர்கள் எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவர்களாக அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்பட்டு தண்டிப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.






No comments