டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள், காரைநகர் சீ நோர்த் படகு உற்பத்தி நிறுவனத்தில் வைத்து இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.
அதன் போது, 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கப்பட்டன.
18 படகுகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நெடுந்தீவிற்கு 2 படகுகளும் , காரைநகருக்கு 1 படகுமாக மூன்று படகுகளும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கொக்குளாய் 6, நாயாறு 3, பெரிய கருப்பட்டி 1, அலம்பில் 1 , முகத்துவாரம் 1, செம்மலை 1 என 13 படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு 2 படகுகளுமாக வழங்கி வைக்கப்பட்டன.
படகுகள் மற்றும் வலைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் , சீ நோர் தலைவர் வசந்த மான்ன பெரும, சீ நோர் பணிப்பாளர் ரோஹண, யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் எஸ். அகிலன், மன்னார் , மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பணிப்பாளர்கள், காரைநகர் பிரதேச செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், மீனவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.





.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)



No comments