Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் இருந்து வந்த வன்முறை கும்பல் - யாழில் வாள் வெட்டு ; மூவர் வைத்தியசாலையில்


கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று , நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றினில் புகுந்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

இந்த துணிகர வாள் வெட்டு சம்பவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற நிலையில் , தாக்குதலில் காயமடைந்த மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நாவாந்துறை பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக , இன்றைய தினம் அதிகாலை கிளிநொச்சியில் இருந்து பட்டா ரக வாகனத்தில் நாவாந்துறையில் உள்ள குறித்த வீட்டிற்கு வந்து , தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது 

தப்பி சென்ற நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments