Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம் - தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் சம புள்ளிகள் பெற்று முதலிடம்


2026ஆம் ஆண்டிற்கான யாழ். மாவட்ட செயலர் வெற்றிக் கிண்ண பரிசளிப்பு நிகழ்வு  நேற்றைய தினம் சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

விளையாட்டு போட்டியில், சுற்றுப் போட்டிகளான - துடுப்பாட்டம் (ஆண்/பெண்), உதைப்பதாட்டம், கரம், சதுரங்கம், பூப்பந்தாட்டம்,  வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், தாச்சி (ஆண்/பெண்), கயிறிழுத்தல்(ஆண்/பெண்) ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அணிவித்து கெளரவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட செயலர் வெற்றிக் கிண்ணத்தினை தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் சம புள்ளிகள் பெற்று தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலர் ம,பிரதீபன், மேலதிக மாவட்ட செயலர் , வடமராட்சி கிழக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி, மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள், பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டிருந்தனர்.











No comments