Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழுக்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சாவில் 16 கிலோ மீட்பு


யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்டுள்ள 250 கிலோ கிராம் கேரளா கஞ்சாவில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இந்தியாவில் இருந்து வல்லிபுரம் கடற்கரை பகுதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு 250 கிலோ கேரளா கஞ்சா கடந்த வாரம் கடத்தி வரப்பட்டுள்ளதாக புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளிலும் வடமராட்சி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகளிலும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் , நெல்லியடி பகுதியில் உள்ள பற்றைக்காடுகளுக்குள் கஞ்சா பொதி காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் அதனை மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட பொதி 16 கிலோ கிராம் எனவும் , அவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்ச ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் 

கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை சிறு சிறு பொதிகளாக வடமராட்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளுக்கு கடத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பிலும் , விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும் ,  அது தொடர்பிலான தகவல்கள் அறிந்தவர்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். 

No comments