யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கிரீட வடிவிலான கொடிக்கம்பத்தின் அர்ச்சிப்பும், ஆலய திருவிழா நவநாள் ஆரம்பம் நேற்றைய தினம் வியாழக்கிழமை, பங்குத்தந்தை அருட்பணி மனுவேல்பிள்ளை றெக்ஸ் சவுந்திரநாயகம் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பத்திநாதன் ஜெபரெட்ணம் அடிகளாரினால் புதிய கொடிக்கம்பம் ஆசீர்வதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புனித யாகப்பர் திருவிழாக் கொடி ஆசீர்வதிக்கப்பட்டு கொடியேற்றத்துடன் நவநாள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நவநாள் திருப்பலியை அருட்பணி கில்லறி வெல்லம் அடிகளார் தலைமையேற்று, அருட்பணியாளர்கள் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
இந்நிகழ்வில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கின் இறைமக்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த திரளான விசுவாசிகள் கலந்து கொண்டனர்.





















No comments