Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

துப்பாக்கி சூட்டுக்காயத்தால் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு


பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை பாணந்துறை வலான பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உடனடியாக பாணந்துறை தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேராதனைப் பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவருக்கு வழங்கப்பட்டிருந்த டி-56 ரக சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments