Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மண் கடத்தல்காரர்களை பிடிக்க ஆற்றில் இறங்கிய STF வீரர் சடலமாக மீட்பு!


சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மஹாவலி கங்கையில்  மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜண்ட் தர அதிகாரியான சமீத் ஜிஹான் ரணசிங்க (வயது 39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சக வீரர்களோடு மஹாவலி கங்கையில் இறங்கியபோது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்டு குறித்த  பொலிஸ் உத்தியோகஸ்தர்  காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

 கடமையின் போது உயிரிழந்த விசேட அதிரடிப்படை வீரரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments