வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாசகம் பெற்ற 30 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளின் பின்னர் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, யாழ், நகர் பகுதி, கோட்டை சுற்றுவட்ட பகுதி , பேருந்து நிலையம் என்பவற்றில் யாசகம் பெறுபவர்கள் , வர்த்தக நிலையத்தினர்களுக்கு , சுற்றுலா பயணிகளுக்கு , நடை பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி சௌகரியங்களை ஏற்படுத்துவதாகவும் , சிறுவர்கள் குழந்தைகளுடன் யாசகம் பெறுவதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் , வடமாகாண சுற்றுலா துறையினர் . யாழ்ப்பாண பொலிஸாருடன் இணைந்து விசேட வேலைத்திட்டமாக , யாழ் நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யசாகம் பெற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பொலிஸாரினால் யாசகம் பெற்ற 30 பேர் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு , விசாரணைகளின் பின்னர் அவர்களை கடுமையாக எச்சரித்து, அவர்களின் சொந்த இடங்களுக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
குறிப்பாக சிறுவர்கள் , குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்களை கடுமையாக எச்சரித்த பொலிஸார் இனிவரும் காலங்களில் மீண்டும் கைது செய்யப்பட்டால் , சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தே அவர்களை பொலிஸார் விடுவித்துள்ளனர்.
















No comments