Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புலிகள் தங்கள் கூட்டுக்கு அழைத்தே போகாதவன்


விடுதலைப்புலிகள் எம்மை கூட்டு அழைத்த போதும் நாம் போகவில்லை.இந்த கூட்டுக்களுக்குள் நாம் செல்ல விரும்புவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழில் உள்ள தனது கட்சி அலுவலத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை கூட்டுக்களும் கூட்டட்டும். அதனால் மக்களுக்கு நன்மை ஏற்படுமாயின் எமக்கும் அது சந்தோசம். 

இந்த கூட்டுக்களுக்குள் நாம் செல்வதற்கு என்றும் விரும்பியதில்லை. புலிகள் கூட எங்களை கூட்டுக்கு அழைத்தார்கள். ஒரு குரலின் கீழ் இயங்குவதற்கோ , அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்குவதற்கோ நாம் தயாராக இருக்கவில்லை. அதானல் அவர்கள் அழைத்த கூட்டுக்கு நாம் செல்லவில்லை. 

அதேநேரம் எமது சக இயக்கத்தினருக்கோ , அரசியல் கட்சிகளுக்கோ அரசியல் பயம் காரணமாக என்னை தம்முடன் இணைக்க பயம். அந்த பயத்தால் அவர்கள் எம்மை அணுகுவதில்லை. அதனால் நாமும் எந்த கூட்டுக்குள்ளும் செல்வதில்லை என தெரிவித்தார்

No comments